Loading...
ஜனாதிபதி, பிரதமரின் பெயர்களை கூறி பாடசாலைகளில் தமது பிள்ளைகளிற்கு அனுமதிகோரி வருபவர்களின் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ள வேண்டாமென பாடசாலை அதிபர்களிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலக அதிகாரிகள், பிரதமர் செயலக அதிகாரிகள், உயர் அரச அதிகாரிகளை குறிப்பிட்டு, தமது பிள்ளைகளை பாடசாலைகளில் இணைக்கும்படி பாடசாலைகளிற்கு விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டு வருகிறது.
Loading...
இந்த கோரிக்கைகளை பாடசாலை அதிபர்கள் ஏற்றுக்கொள்ளக் கூடாது என ஜனாதிபதியின் செயலாளர், சகல பாடசாலை அதிபர்களிற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படியான கோரிக்கைகளை ஏற்று, மாணவர்களை பாடசாலைக்கு இணைக்கும் அதிபர்கள் மீது நடவடிக்கையெடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
Loading...