பல மில்லியன் நிதி மோசடியில் ஈடுபட்ட 9 பேரை யோர்க் பிராந்திய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
30 மில்லியன் டொலர்களுக்கும் அதிகமான மோசடிகளில் இவர்கள் ஈடுபட்டனர் என்றும், குறித்த இந்த மோசடி காரணமாக வர்தகர்கள், வங்கிகள், முதலீட்டாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
கைதானவர்கள் 44 – 71 வயதிற்கு இடைப்பட்டவர்கள் எனத் தெரிவித்த பொலிஸார், இவர்களுக்கு எதிராக மொத்தமாக 42 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
இந்நிலையில் இந்த 9 பேர் மீதும் 5,000 டொலர்களுக்கு மேல் மோசடி செய்தமை, சட்டத்திற்கு முரணாக மோசடியான வகையில் நிதிக் கையாடல்களில் ஈடுபட்டமை, பொது வர்த்தகத்தினை பாதிக்கும் வகையில் மோசடியில் ஈடுபட்டமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இதேவேளை இந்த மோசடிகள் தொடர்பில் “ஏசி சைமண்ட்ஸ் குரூப்” எனப்படும் நிறுவனத்துக்கு எதிராக, கடந்த 2014ஆம் ஆண்டில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாகவும் பொலிஸார்; தெரிவித்துள்ளனர்.