20,000 வருடங்கள் பழமையுடையவர்களாக கருதப்படும் ஒரு பூர்வீககுடி தன்னினம் வாழும் பகுதிகளுக்குள் அந்நியரை நுழையவிடாமல் வாழும் அதிர்ச்சியான சம்பவம் பிரேஸிலின் பேரு எல்லைப்பகுதியிலுள்ள மலைக்காட்டுப்பகுதியில் நடந்துள்ளது.
புகைப்படக்கலைஞரான ரிச்சர்சோ ஸ்டக்கர் தனது கேமாராவில் அமேசன் வனப்பகுதிகளை பதிவுசெய்ய ஹெலிக்ஹோப்டர் மூலம் பயணித்துள்ளார்.
பேரு எல்லைப்பகுதியிலுள்ள மலைக்காட்டுப்பகுதியில் சில ஆள் நடமாட்டங்கள் இருக்கவே அம்மக்களை தனது புகைப்படக்கருவியிற்குள் பதிவு செய்ய முற்பட்ட நிலையில் எதிர்பாராத விதமாக அம்மக்கள் கூட்டத்தினர் ஹெலிக்ஹோப்டரை நோக்கி வில் அம்பு தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளனர்.
இச்சம்பவம் பற்றி உள்ளுர் தொடர்பாடல் மையத்திலிருந்து வழிகாட்டியாக சென்றுள்ள ஜோஸ் கார்லஸ் மெய்ரெல்லஸ் கூறுகையில். “அங்குள்ள மக்கள் தங்களுக்கான எல்லைகளை தீர்மானித்து வாழுகின்றனர். அதனால் தங்களின் நிம்மதியான வாழ்க்கைளை யாரும் சீர்குழைத்து விடக்கூடாது என்பதில் கவனமாக உள்ளனர்.
அத்தோடு அவர்கள் தங்கள் உடல்களுக்கு பல வர்ணங்களை பூசியுள்ளனர். அவர்கள் வாழுகின்ற இடங்களுக்கு அருகில் நிறையவே சோளம், மரவள்ளி மற்றும் வாழை போன்ற தானியப் பயிர்கள் அதிகளவில் வளர்ந்துள்ளன.
அம்மக்கள் இன்னும் வில் அம்புகளை பயன்படுத்துகின்றனர். அத்தோடு சிலர் கத்தி போன்ற இரும்பினால் ஆன ஆயுதங்களை கையில் வைத்துள்ளனர். இதுவரையும் அம்மக்கள் எந்தவகை பூர்வீக குடிகள் என இனம்காணப்படவில்லை.
இருப்பினும் அவர்கள் 20.000 வருடங்களுக்கு முன் வாழ்ந்த பழங்குடிகளை பின்தொடர்ந்து வாழும் சுமார் 300 பேர் வரையிலான மக்கள் கூட்டத்தை கொண்டவர்கள்.
21ஆம் நூற்றாண்டில் மக்கள் கூட்டங்களுக்கிடையிலான தொடர்புகள் அதிகரித்த நிலையில் வேற்று சமூகத்தவரின் தொடர்பை கொண்டிராமல் வாழும் ஒரு தனித்துவமான கூட்டம் என குறித்த பூர்வீக மக்களைப் பற்றி விவரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.