“எனக்கு எழுதும் பழக்கம் உண்டு. நிறைய எழுதுவேன். ஆனால் புத்தகம் எழுத வேண்டும் என்று திட்டமிடவில்லை. அதுவாக நடந்தது.எனது புத்தகத்தை படித்து எங்கள் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர். எனக்கு நல்ல குடும்பம் அமைந்திருக்கிறது. அவர்களுடைய முழு ஆதரவும் இருக்கிறது. நான் வெளியூர் சென்றால் என் அம்மா என் குழந்தைகளை பார்த்துக் கொள்வார். என் கணவரும் எனக்கு முழு ஆதரவாக இருக்கிறார்.
என் தந்தை ரஜினியும், கணவர் தனுசும் என்னை நினைத்து பெருமைப் படு கிறார்கள். நான் எழுத்தாளர் ஆவேன் என்று எனது தந்தைக்கு தெரியும் என்று நினைக்கிறேன். எனவே, நான் புத்தகம் எழுதியது அவருக்கு புதிதல்ல.
நான் 180 பக்கம் கொண்ட புத்தகம் எழுதி இருக்கிறேன். இது என் கணவர் தனுசுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து இருக்கிறது. என் தந்தை பற்றிய ஏராளமான ஜோக்குகள் என் செல்போனுக்கு வரும். அதை என் தந்தையும் படித்துப் பார்த்து ரசித்து இருப்பார். சீரியசாக எடுத்துக் கொள்ள மாட்டார்” என்று கூறியுள்ளார்.