மொத்தமுள்ள 10 பெருநகரங்களிலும் கொரோனா வைரஸ் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் கிரேட்டர் மான்செஸ்டர் பகுதிக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மட்டுமின்றி, முதன்முறையாக முக்கிய இரண்டு பெருநகரங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது கடந்த ஏப்ரல் மாதம் பதிவானதை விடவும் அதிகமானதாகவும் தெரிய வந்துள்ளது.
ஸ்டாக் போர்ட் மற்றும் டிராஃபோர்டு பகுதிகளில் 100,000 பேருக்கு 50 க்கும் மேற்பட்ட நோய்த்தொற்று விகிதங்களை பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மட்டுமின்றி தொடர்ந்து 3 நாட்களில் மான்செஸ்டர் பகுதியில் கொரோனாவுக்கு இலக்கானவர்கள் எண்ணிக்கையானது 100 கடந்துள்ளது.
ஆனால், பிரித்தானியாவில் கொரோனா பரவல் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் மான்செஸ்டரில் ஒரே நாளில் கொரோனாவுக்கு இலக்கானவர்கள் எண்ணிக்கை 73 என பதிவாகி இருந்தது.
முதன்முறையாக, ரோச்ச்டேலில் 100 க்கும் அதிகமானோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
பரி மற்றும் ஓல்ட்ஹாமின் எண்ணிக்கை இன்னும் அதிகரித்து வருகிறது, நோய்த்தொற்று விகிதங்கள் முறையே 119.9 மற்றும் 127.8 என பதிவாகியுள்ளது.
கிரேட்டர் மான்செஸ்டர் பகுதியை பொறுத்தமட்டில் கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா பாதிப்பு விகிதம் 75.5 என பதிவாகியிருந்த நிலையில், தற்போது 102.34 என அதிகரித்துள்ளது.
இதனையடுத்து கிரேட்டர் மான்செஸ்டர் பகுதியில் உள்ள அனைத்து பெருநகரங்களுக்கும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.