இலங்கையில் மிக குறைந்த வயதுடைய இறுதி பயணங்களை ஆயத்தப்படும் பெண் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தினுஷா என்ற குறித்த பெண் ருவன்வெல்ல ராஜசிங்க மைதானத்திற்கு அருகில் வசிக்கும் மஞ்சுல ஜயஷாந்த மற்றும் விநித்தா சில்வாவின் ஒரு மகளாகும்.
பொறியிலாளராகும் கனவில் இருந்த தினுஷா என்ற பெண், குடும்பத்திற்காக மேற்கொண்ட தொழில்முறை குறித்து அதிகம் பேசப்படுவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
பாடசாலை செல்லும் வயதிலியே தந்தையின் வாகனம் பழுது பார்க்கும் இடத்தில் உதவி செய்து வேலைப் பயின்றுள்ளார். அதன் போது அவர் வாகனம் ஓட்டுவதற்கும் பயிற்சி பெற்றுள்ளார்.
பாடசாலையில் 11ஆம் வகுப்பு படிக்கும் போது சாதாரண வாகனத்தில் இருந்து பெரிய வாகனங்கள், பெகோ இயந்திரங்கள் உட்பட நிர்மாணிப்பு இயந்திரங்கள் போன்றவற்றை செயற்படுத்தும் முறையை பயின்றுள்ளார்.
வாகனம் திருத்தும் இடத்திற்கு மேலதிகமாக தினுஷாவின் தந்தை ருவன்வெல்ல கூட்டுறவு சவப்பெட்டி செய்யும் கடை ஒன்றில் சேவை செய்துள்ளார்.
அங்கு தனது தந்தை எம்பம் செய்யும் முறையினையும் பார்த்து பழகியுள்ளார். அந்த நடவடிக்கைகளுக்கு தினுஷா உதவி செய்துள்ளார். பொறியிலாளராகும் கனவை தினுஷா கைவிட்டார்.
எனினும் பொறியிலாளருக்கு கிடைக்கும் சம்பளத்தை விடவும் உயர் வருமானம் ஒன்றை மாதாந்தம் அவர் ஈட்டினார். மலர்சாலையின் அனைத்து நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக இறுதி ஊர்வல வாகனத்தை செலுத்துவதும் அவராகும்.
இந்த நிலையில் தங்கள் வீட்டிலேயே மலர்சாலை ஒன்றை தினுஷா உருவாக்கியுள்ளார். அதற்கு அருகிலேயே வாகனம் பழுது பார்க்கும் இடமும் உள்ளது.
சில சந்தர்ப்பத்தில் அவரால் இலங்கையில் உள்ள முதல் மற்றும் ஒரே ஒரு பெண் மலர்சாலை இயக்குனராக மாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மலர்சாலையில் உள்ள அனைத்து பொருட்களும் வீட்டில் உள்ள போது பலர் அச்சப்படுவதாகவும், வாகனம் திருத்த வந்தாலும், சற்று தூரத்தில் இருந்தே பேசுவதாகவும் சிலர் அந்த அளவில் சவபெட்டிக்கு அச்சப்படுவதாக தினுஷா தெரிவித்தள்ளார்.
மகன் ஒருவன் தங்களுக்கு இருந்திருந்தாலும் இப்படி செய்திருக்கமாட்டர். எனினும் மகள் அச்சமின்றி இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும், இந்த வேலைக்கு நல்ல அர்ப்பனிப்பு அவசியம். இதற்கான அனைத்து திறமையும் மகளுக்கு உள்ளதாக தினுஷாவின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
மாதாந்தம் இரண்டரை லட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணத்தை தினுஷா சம்பாதிக்கின்றார்.
மாதாந்தம் 10 முதல் 15 சடலங்களுக்கு எம்பம் செய்யப்படுகின்றது. நானும், தாயும் தந்தையும் சுற்றுலா பயணங்களுக்கு செல்வோம். சமூக சேவைகளுக்கு உதவி செய்வேன்.
வாகனம் ஒன்றை கொள்வனவு செய்வதற்கு எதிர்பார்கின்றேன். மேலும் மலர் சாலையை அவிருத்தி செய்வதற்கு திட்டமிட்டுள்ளேன். என்னை புரிந்துக் கொண்ட ஒருவர் திருமணம் செய்வதற்கும் எதிர்பார்க்கின்றேன். பெற்றோரை பாரத்துக் கொள்வதே எனது பொருப்பு என தினுஷா மேலும் தெரிவித்துள்ளார்.