விடுதலைப் புலிகளின் வீமானப் படை தளபதியாக இருந்த, கேணல் சங்கர் அவர்கள் இறந்த செய்தி கிடைத்த உடனே பிரபாகரன் அவர்களின் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது. அதனை நான் அன்று தான் முதல் தடவையாக பார்த்தே என்கிறார், தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களின் மேய் பாதுகாப்பாளராக இருந்த ரகு. அவர் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு கொடுத்துள்ள நேர் காணம் ஒன்றிலேயே மேற் கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
விடுதலைப் புலிகள் அமைப்பின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரான கேணல் சங்கர் அவர்கள், இலங்கை ஆழ ஊடுருவும் படையின் கிளைமோர் தாக்குதலில் பலியானார். இந்த செய்தி தலைவரின் காதுகளுக்கு எட்டியவேளை நானும் அவர் அருகே இருந்தேன். இந்த செய்தி கேட்ட அவர் கண்களில் கண்ணீர் வந்தது. எனது வலது கரத்தை இழந்தது போன்ற ஒரு உணர்வில் உள்ளேன் என்று தலைவர் அன்று கூறினார். அதன் பின்னர் இலங்கை ஆளில்லா உளவு விமானத்தின் உதவியோடு சு.ப.தமிழ்ச் செல்வன் அவர்கள் இருக்கும் இடத்தை , இலங்கை ராணுவம் துல்லியமாக கண்டு பிடித்தது.
சு.ப.தமிழ்ச் செல்வன் அவர்கள் கொல்லப்பட்ட செய்தி கேட்டு தலைவர் மேலும் அதிர்சியடைந்தார். ஆனால் தமீழ போராட்டத்தில் ஒரு போராளி இறப்பது என்பது சாதாரண விடையம். எங்கள் லட்சிய பாதை நோக்கி நாம் முன்னேற வேண்டும் என்று பேசிய தலைவர். பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சு.ப.தமிழ்ச் செல்வனின் இறுதி மரியாதையில் கலந்து கொண்டார் என்றும் ரகு அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளார்.