கொரோனாவால் பாதிக்கப்பட்டு, வீட்டில் தங்கி இருக்கும் நபருக்கு 500 பவுண்டுகளை வழங்க பிரித்தானிய அரசு சட்டம் ஒன்றை நடை முறைக்கு கொண்டு வந்துள்ளது. இது செல்வந்தர்களுக்கு செல்லுபடி ஆகாது. குறைந்த வருமாணத்தில் உள்ளவர்களுக்கு இந்த 500 பவுண்டு கொடுப்பனவு கிடைக்கும். இதேவேளை வேறு நாடுகளுக்கு சென்று விட்டு பிரித்தானியா திரும்பும் நபர்கள். மற்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கும் நபர்கள் 14 நாட்கள் வீட்டில் தங்க வேண்டும். Source: Boris Johnson unveils £10,000 fines for those breaking self-isolation rules while people on low incomes will be paid £500 to stay indoors in strict new restrictions
அப்படி அவர்கள் தங்காமல் வெளியே சென்றால், 10,000 பவுண்டுகள் தண்டம் அறவிடப்படும் என்பதனை பொறிஸ் ஜோன்சன் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இதனால் மக்களே மிக மிக ஜாக்கிரதை. அதிகாரிகள் வீட்டு தொலைபேசிக்கே அழைப்பை விடுக்கிறார்கள். குறித்த நபர் பேசவில்லை என்றால். உடனே அந்த வீட்டுக்கு அதிகாரிகளை அனுப்பி சோதனை செய்கிறார்கள். எனவே வெளி நாடு சென்று வந்த தமிழர்கள். மற்றும் கொரோனா தொற்று இருக்கு என்று கருத்தும் தமிழர்கள் 14 நாட்கள் வீட்டில் தங்கி இருக்க வேண்டும்.
இது போக கடந்த 24 மணி நேரத்தில் 4,322 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்கிறது அரசு. இந்த எண்ணிக்கை மேலும் சில மடங்காக இருக்க வாய்ப்புகள் உள்ளது.