ஜேர்மன், பிரான்ஸ், இத்தாலி, என்று 22 ஐரோப்பிய நாடுகளில் உள்ள பல தமிழர்கள் தமது பிள்ளைகளின் படிப்புக்காக லண்டன் வந்து தங்கியுள்ளார்கள். அவர்கள் வேலை செய்து கொண்டு தமது வங்கி கணக்கை பிரித்தானியாவில் வைத்திருக்கிறார்கள். ஆனால் டிசம்பர் மாதம் 31ம் திகதி இரவு 11 மணியோடு அந்த வங்கி கணக்குகள் அனைத்தும் மூடப்படும் அபாயம் தற்போது தோன்றியுள்ளது. ஐரோப்பாவில் இருந்து பிரித்தானியா பிரிந்துள்ள நிலையில். Tens of thousands of British expats in Europe ‘will be stripped of their UK bank accounts and credit cards in weeks’ after government failed to negotiate post Brexit rules
பிரித்தானியா எந்த ஒரு வணிக ஒப்பந்தத்திலும் இதுவரை கைச்சாத்திடவில்லை. இதனால் பாக்கிளேஸ் வங்கி, லெயிட்ஸ் வங்கி, டி.எஸ்.பி வங்கி என்று பல முன்னணி வங்கிகள், ஐரோப்பிய ஒன்றிய பாஸ்போட் மூலம் திறக்கப்பட்ட அனைத்து வங்கிக் கணக்குகளையும் டிசம்பர் மாதம் 31ம் திகதி முடக்கும் நிலை தோன்றியுள்ளது. தற்போது நிலவும் கொரோனா பிரச்சனை காரணமாக, பிரிட்டன் அதிபர் பொறிஸ் ஜோன்சன், இதுவரை எந்த ஒரு டீலையும் செய்யவில்லை என்பது மிகவும் ஆபத்தான விடையம் ஆகும்.
எனவே ஐரோப்பிய நாடுகளில் இருந்து வந்து, லண்டனில் குடியேரியுள்ள தமிழர்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது.