ஆப்பிள் நிறுவனம் தனது புத்தம் புதிய இயங்குதளப் பதிப்பினை அறிமுகம் செய்துள்ளது.
iOS 14 எனும் இப் பதிப்பில் புதிய வசதிகள் உட்பட சில மாற்றங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
அதுமாத்திரமன்றி யூடியூப் வசதியிலும் மாற்றம் ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது.
அதாவது Picture in Picture வசதியிலேயே இந்த மாற்றம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Picture in Picture எனப்படுவது யூடியூப் வீடியோ விண்டோவினை சிறிய விண்டோவாக மாற்றி ஏனைய அப்பிளிக்கேஷனை ஒரே நேரத்தில் பயன்படுத்தக்கூடிய வசதியாகும்.
இவ் வசதியினை புதிய ஆப்பிள் இயங்குதளப் பதிப்பில் பயன்படுத்தும்போது அது முறையாக செயற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வசதியினை சிறந்த முறையில் பயன்படுத்துவதற்கு கட்டணம் செலுத்த வேண்டியிருக்கலாம் எனவும், இது குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் ஆப்பிள் அல்லது யூடியூப் நிறுவனத்திடமிருந்து வெளியாகவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.