சமீபத்தில் அஜித் மோட்டார் சைக்கிளில் சாகசம் (வீலிங்) செய்யும் காட்சி இணையதளத்தில் வெளியானது. இதையடுத்து, அஜித் கறுப்பு டீசர், ஜீன்ஸ் பேண்ட், கண்ணாடி, தொப்பியுடன் ஸ்டைலாக போஸ் கொடுக்கும் புகைப்படம் ஒன்று இணையதளங்களில் வெளியாகி இருக்கிறது.
காஜல் அகர்வால் பல்கேரியாவில் இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளில் நீர் துளிகள் பனிக்கட்டியாக உறைந்திருப்பதை புகைப்படமாக எடுத்து அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.
பல்கேரியாவில் நடந்து வரும் இரண்டாம் கட்ட படப்பிடிப்புடன் இந்த படத்தின் 80 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிடும் என்று கூறப்படுகிறது. மீதம் உள்ள 20 சதவீத படப்பிடிப்பை ஐதராபாத்தில் உள்ள திரைப்பட நகரில் நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் கிறிஸ்துமஸ் கொண்டாடுவதற்காக அஜித் பல்கேரியாவில் இருந்து சென்னை திரும்பினார்.
இந்த படத்தின் பாடல்களை மார்ச் மாதம் வெளியிட முடிவு செய்து இருக்கிறார்கள். படத்தை தமிழ் புத்தாண்டில் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.