யாழ். குடாநாட்டிலுள்ள தீவுகளை தெற்கு சூறையாடத்தொடங்கியுள்ள நிலையில் மண்டைதீவில் அல் அமான் குழுவினால் ஜந்து நட்சத்திரவிடுதியொன்று நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அங்கு 5 நட்சத்திர ஹோட்டல் மற்றும் தங்குமிட வசதிகளை கொண்ட சூழல் ஒன்று உருவாக்கப்படவுள்ளதாக தெரியவருகின்றது.
37 மாடியிலான இந்த திட்டத்திற்கு மண்டைதீவில் 33 ஹெக்டேர் நிலம் பயன்படுத்தப்படவுள்ளது.
யாழ்.நகரின் அருகாகவுள்ள மண்டைதீவில் இதற்கென காணிகள் அடையாம் காணப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
ஏற்கனவே பாகிஸ்தானிய வர்த்தகரொருவர் மண்கும்பான பகுதியில் இதே போன்று நட்சத்திரவிடுதியொன்றை அமைக்க முற்பட்டிருந்த நிலையில் அது இந்திய துணைதூதுவராலயத்தால் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தது.
இதனிடையே மண்டைதீவு கட்டடத்தொகுதியில் விடேச அம்சங்களாக குடியிருப்பு திட்டங்களும் உள்ளடக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.