மல்வத்து மற்றும் அஸ்கிரி மாநாயக்க தேரர்களை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்றுசந்தித்து ஆசி பெற்றுள்ளார்.
கண்டி தலாதா மாளிகையில் விசேட வழிபாடுகள் இன்று முற்பகல் பிரதமர் ரணில்விக்கிரமசிங்க ஈடுபட்டார்.
அதன் பின்னர் அவர் மல்வத்து மற்றும் அஸ்கிரி மாநாயக்க தேரர்களை சந்தித்தார்.இதையடுத்து, ஊடகங்களை சந்தித்போது, ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மறைக்கும் போக்கில் பதிலளித்தார்.
மநாயக்க தேரர்களை சந்தித்தமைக்கான காரணம் என்ன? அரசியல் அமைப்பு குறித்துகலந்துரையாடப்பட்டதா என ஊடகவியலாளர்கள் இதன்போது பிரதமரிடம் கேள்விகளை எழுப்பினர். இதற்கு பதிலளித்த பிரதமர் ரணில் விக்கரமசிங்க,
மாநாயக்க தேரர்களை சந்தித்தேன். அவர்களை சந்தித்ததில் விசேட அம்சம் ஒன்றும்இல்லை. சில பிரச்சினைகள் குறித்து அவர்கள் கடிதம் வழங்குவர். அதனை தீர்த்து வைக்கவேண்டுமல்லவா? என்றார்.
புத்தங் சரணம் கச்சாமி ,தம்மங் சரணம் கச்சாமி ,சங்கம் சரணம் கச்சாமி என்று மாநாயக்க தேரர்கள் தன்னிடம் கூறியதாக பிரதமர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.