அருகில் இருப்பவர்களை அனு சரித்துச் செல்ல வேண்டிய நாள். ஆதாயம் குறைவாகவே கிடைக் கும். நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடிக்க முடியுமா என்பது சந்தேகம்தான்.
கல்யாண வாய்ப்புகள் கைகூடும் நாள். காரிய வெற்றிக்கு உறவினர் வழி ஒத்துழைப்பு கிடைக்கும். நீண்ட தூரப் பயணங்கள் நிழல் போலத் தொடரும். குடும்பத்தினர்களை அனுசரித்து செல்வது நல்லது.
எதிரிகள் உதிரியாகும் நாள். எதிர்பார்த்த இடத்திலிருந்து பண உதவி கிடைக்கும். உத்யோக அனுகூலம் உண்டு. பொது நலத் தில் ஈடுபட்டவர்களுக்கு புதிய பொறுப்புகள் வந்துசேரும்.
பிள்ளைகள் வழியில் நல்ல தகவல் வந்து சேரும் நாள். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும். விலகிச் சென்ற உடன் பிறப்புகள் விரும்பி வந்து சேருவர். குடும்ப ஒற்றுமை கூடும். அரசியல் அனுகூலம் உண்டு.
சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். வீடுகட்டும் முயற்சியில் அல்லது வாங்கும் முயற்சிக்கு வித்தி டுவீர்கள். வெளிநாட்டி லிருந்து வியக்கும் தகவல் வந்து சேரலாம். தாய்வழி ஆதரவு கிடைக்கும்.
உடன்பிறப்புகளின் வழியில் ஒத்துழைப்புக் கிடைத்து மகிழும் நாள். ஊர்மாற்றச் சிந்தனைகள் மேலோங்கும். எந்தக் காரியத் தையும், எடுத்தோம், முடித்தோம் என்று செய்து முடிப்பீர்கள்.
நண்பர்களின் பாசமழையில் நனையும் நாள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். நீண்ட நாட்களாக செல்ல முடியாத உறவி னர் ஒருவரின் வீட்டிற்கு இன்று சென்று வரும் வாய்ப்பு கிட்டும்.
குடும்பசுமை கூடும் நாள். குதூகலத்தை வரவழைத்துக் கொள்ள பயணங்களை மேற் கொள்வீர்கள். பிள்ளைகள் உங் கள் குணமறிந்து நடந்து கொள்வர். விருந்தினர் வருகை உண்டு.
பங்காளி பகை மாறும்நாள். பணவரவு போதுமானதாக இருக் கும். நூதன பொருட்சேர்க்கை உண்டு. நோய்தீர புதிய மருத்து வத்தை மேற்கொள்வீர்கள். தொகை கேட்ட இடத்திலிருந்து கிடைக்கலாம்.
பணம் பையை நிரப்பும் நாள். பாடுபட்டதற்கேற்ற பலன் கிடைக்கும். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரலாம். பிள்ளைகளை கண்காணித்து கொள்வது நல்லது.
வளர்ச்சி மேலோங்கும் நாள். வருங்கால நலன்கருதி எடுத்த முயற்சிகளுக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கூட்டாளிகளை மாற்றம் செய்ய முன்வருவீர்கள்.
விரயங்கள் கூடும் நாள். வேற்று மனிதர்களிடம் பொறுப்பை ஒப்ப டைக்கும் பொழுது கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. குடும்பத்தி னர்களை அனு சரித்துச் செல்வதன் மூலமே அமைதி காண இயலும்.