பிரித்தானியா தலைநகர் லண்டனில் உள்ள குரோய்டன் காவல் நிலையத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விண்ட்மில் சாலையில் உள்ள காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒருவரால் அந்த அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டார்.
சம்பவத்திற்கு முன் குறித்த சந்தேக நபர் காவல்நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார், அங்கு பொலிசார் அவரை சோதனை செய்தனர்.
அப்போது தன்னிடமிருந்து ஆயுதத்தை வழங்குவதற்கு முன் பொலிஸ் அதிகாரியை துப்பாக்கியால் சுட்டு பின்னர் தன்னை தானே சுட்டுக்கொண்டுள்ளார்.
சம்பவத்திற்குப் பிறகு அந்த அதிகாரிக்கு துணை மருத்துவர்களால் சம்பவ இடத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் மருத்துவமனையில் கொண்டு செல்லப்பட்ட அதிகாரி உயிரிழந்துள்ளார்.
சம்பவயித்திலேயே துப்பாக்கிச் சூடு நடத்திய 23 வயது இளைஞரை அதிகாரிகள் கைது செய்தனர். துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
பொலிஸ் அதிகாரி மறைவுக்கு பிரதமர் போரிஸ் ஜான்சன் உட்பட பல இரங்கல் தெரிவித்துள்ளனர்.