சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன ஜனவரி மாதம் 26ஆம் திகதி கொலைசெய்யப்படுவார் என வெளியான ஆரூட செய்தியையடுத்து அவரது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக சிறீலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன கெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன ஜனவரி மாதம் 26ஆம் திகதி கொல்லப்படுவார் என விஜிதமுனி கேரத் என்ற ஜோதிடர் எதிர்வுகூறியிருந்தார்.
குறித்த ஆரூடச் செய்தியின் பின்னால் ஒரு அரசியல் சதி இருப்பதாகவும், இது தொடர்பாக விசாரணை நடாத்தப்படுமெனவும் சிறீலங்காவின் ஊடகத்துறை அமைச்சின் செயலர் நிமல் போபகே தெரிவித்திருந்தார்.
இந்நிலையிலேயே சிறீலங்கா ஆட்சியாளரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக, பாதுகாப்புச் செயலர் கருணாசேன கெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
குறித்த ஆரூடத்திற்குப் பின்னால் சதித் திட்டங்கள் ஏதாவது இருக்கா என்பது தொடர்பாக பாதுகாப்புத் தரப்பினர் ஆராய்ந்துவருவதாகவும், பாதுகாப்புக் காரணங்களுக்காக அது தொடர்பான தகவல்களை வெளியிடமுடியாது எனவும் தெரிவித்துள்ளார்.