சுரேஷ் ரெய்னா சென்னை அணிக்கு திரும்ப வாய்ப்புள்ளதா என்பது குறித்து சிஎஸ்கே தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் தெளிவுப்படுத்தியுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் 2020 ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு எதிரான முதல் போட்டி வெற்றிப்பெற்ற சென்னை அணி, அடுத்தடுத்து ராஜஸ்தான் மற்றும் டெல்லி அணிகளுக்கு எதிரான போட்டியில் தோல்வியை தழுவியது.
தொடர் தோல்வியால் ஏமாற்றமடநை்த சென்னை ரசிகர்கள், தனிப்பட்ட காரணங்களுக்காக ஐபில் 2020 தொடரிலிருந்து விலகிய சுரேஷ் ரெய்னா, மீண்டும் அணிக்கு திரும்ப வேண்டும் என சமூக வலைதளங்கள் வாயிலாக கோரி வருகின்றனர்.
இந்நிலையில், ரெய்னாவை குறித்து யோசிக்கக்கூட அணி நிர்வாகத்தால் இயலாது, ஏனெனில் அவர் தானாகவே விலகிவிட்டார் மற்றும் அவரது முடிவை நாங்கள் மதிக்கிறோம் என சிஎஸ்கே அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதம் தெளிவுப்படுத்தியுள்ளார்.
மேலும், சென்னை அணி மீண்டும் வலுவாக களமிறங்கும் என உறுதியளித்த காசி விஸ்வநாதன், ரசிகர்கள் மீண்டும் மகிழ்ச்சியடைவார்கள் என கூறினார்.
அதே சமயம் அம்பதி ராயுடு காயத்திலிருந்து மீண்டுவிட்டார், அவர் அடுத்த போட்டியில் விளையாட தயாராக உள்ளார் என விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.