புத்தளம் கடற்கரைப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின போது தங்கக்கட்டிகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புத்தளம் பொலிஸ் விஷேட புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய புத்தளம் பொலிஸாருடன் இணைந்து நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போது தங்க கட்டிகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சொகுசு மோட்டார் சைக்கிள் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த தங்ககட்டிகள் 4 கிலோகிராமிற்கு அதிக எடையுடைதாக காணப்படுவதுடன் 4 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
தங்கக்கட்டிகள் சட்டவிரோதமாக கடல்மார்க்கமாக இந்தியாவிற்கு கொண்டு செல்வதற்காக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிப்பதாக தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர் நாகவில்லு பகுதியைச் சேர்ந்தவரெனவும் மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.