Loading...
தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் செல்ல மாட்டேன் என்று ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களிடம் இந்த தகவலை ரணில் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சிக்கு நாடாளுமன்றத் தேர்தலில் ஒரே ஒரு ஆசனம் கிடைத்துள்ளது. எனினும் குறித்த ஆசனத்திற்கு இன்னும் யாரும் நியமிக்கப்படவில்லை.
Loading...
இந்த ஆசனத்தை தமக்கு தருமாறு கட்சியிலுள்ள பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் ரணிலே குறித்த ஆசனத்தினூடாக நாடாளுமன்றம் செல்ல வேண்டும் என பலர் கோரியுள்ளனர்.
எனினும் இதற்கு ரணில் மறுத்துள்ளதாக கூறப்படுகின்றது.
Loading...