லண்டன் குரைடனில் உள்ள பொலிஸ் நிலையத்தில் வைத்து, பொலிஸ் சார்ஜெண்டை சுட்ட நபர் ஒரு சிங்களவர் என்று அதிர்வு இணையம் அறிகிறது. முன்னர் அவர் இலங்கை தமிழர் என்று கூறப்பட்ட போதும். அவர் சான டீ சொய்ஸ்ஸா என்ற இலங்கை சிங்களவரின் மகன் ஆவார். சான டீ செய்ஸ்ஸா, எலிசபெத் என்ற பிரித்தானிய பெண்ணை மணம் முடித்துள்ளார். அவர்கள் இருவருக்கும் 3 ஆண் பிள்ளைகள் உள்ளார்கள். அவர்களின் மூத்த பிள்ளையே 23 வயதாகும் லூயிஸ் ஆவார்.
அவர்களது குரைடன் வீட்டை தற்போது பொலிசார் முற்றுகையிட்டு சோதனை நடத்தி வருகிறார்கள். வீட்டிற்கு உள்ளேயும் இருந்து ஆயுதங்கள் கண்டு பிடிக்கப்பட்டதா என்ற தகவல் இதுவரை கிடைக்கவில்லை. மேலும் 23 வயதாகும் லூயிஸ் என்ற இந்த சிங்கள இளைஞர் போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்ததாகவும் அயலவர்கள் தெரிவித்துள்ளார்கள். அவரது வீட்டு மற்றும் அருகில் உள்ள பல இடங்களை சல்லடை போட்டு தேடி வருகிறது ஸ்காட்லன் யாட் பொலிஸ்.
லண்டன் மெற்றோ பொலிடன் பொலிசாரின் கைகளில் இருந்து, இந்த வழக்கு விசாரணை தற்போது ஸ்காட்லன் யாட் பொலிசாருக்கு மாற்றப்பட்டுள்ளது.