Loading...
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் விஜயகாந்த் நாளை வீடு திரும்பவுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
68 வயதான விஜயகாந்த், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் கடந்த 23 ஆம் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இதன்போது அவருக்கு கொவிட் 19 தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.
Loading...
இதற்கமைய விஜயகாந்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அவரின் உடல்நிலை சீராக இருப்பதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிப்பதாக தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் துணைச் செயலாளர் சுதிஷ் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் விஜயகாந்த் சிகிச்சைகள் நிறைவடைந்து நாளை வீடு திரும்புவார் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
Loading...