Loading...
கரையொதுங்கிய நிலையில் உயிருடன் காணப்பட்ட 108 திமிங்கிலங்கள் மீள ஆழ் கடலில் விடுவிக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய நீர்வள நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு அமைய அவுஸ்திரேலியாவின் ரஸ்மானிய மேற்கு கரையோர பகுதியை சேர்ந்த மக்குவாரின் துறைமுகத்தையும் அதனை அண்டிய பிரதேச கரையோர பிரதேசங்களில் திமிங்கிலங்கள் எதுவும் இல்லை என நம்புவதாக தெரிவித்துள்ளனர்.
எப்படியிருப்பினும், காப்பாற்றப்படாத நிலையில், 350 திமிங்கிலங்கள் மரணித்துள்ளன.
Loading...
இந்த நிலையில் மரணமான திமிங்கிலங்களில் சடலங்கள் கரையோர பகுதியிலேயே அடக்கம் செய்யப்பட்டுள்ளன.
மீட்பு பணியாளர்கள் தொடர்ந்து இரவு பகலாக ஐந்து நாட்களாக மேற்கொண்ட பணிக் காரணமாக இது சாத்தியமாகியுள்ளதாக நீரியல் பாதுகாப்பு திட்டத்தின் உயிரியல் நிபுணர் கிறிஸ் கால்யோன் தெரிவித்துள்ளார்.
Loading...