Loading...
தென்மேற்கு சீனாவில் சோங்கிங் நகரில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட அனர்தத்தில் சிக்கி 16 சுரங்க பணியாளர்கள் உயிரிழந்தனர்.
அந்த பகுதியில் உள்ள எரிசக்தி நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான நிலக்கரி சுரங்கத்திலேயே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
நிலக்கரி சுரங்கத்தில் 17 பணியாளர்கள் சிக்கியிருந்த நிலையில் அதில் ஒருவர் மாத்திரே உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
Loading...
இந்தநிலையில் அவரும் கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சுரங்கத்தினுள் காபன் மோனோக்சைட்டின் சதவீதம் அதிகரித்தமை காரணமாக இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Loading...