சென்னை கோயம்பேடு சந்தைக்கு பொதுமக்கள் தயவு கூர்ந்து வரவேண்டாம் என கோயம்பேடு மொத்த வியாபாரிகள் சங்க கூட்டமைப்பின் தலைவர் ராஜசேகர் என அறிவுறுத்தியுள்ளார்.
கொரோனா தொற்று காரணமாக கடந்த 5 மாதங்களாக மூடப்பட்டிருந்த கோயம்பேடு காய்கறி மொத்த விற்பனை அங்காடி திறக்கப்பட்டது. இதனை தலைமை திட்ட அலுவலர் பெரியசாமி முதன்மை நிர்வாக அலுவலர் கோவிந்தராஜ் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றியும் ரிப்பன் வெட்டியும் துவக்கி வைத்தனர்.
தொடர்ந்து கிருமிநானிசி தெளித்து சரக்கு வாகனங்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டன. இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கோயம்பேடு மொத்த வியாபாரிகள் சங்க கூட்டமைப்பின் தலைவர் ராஜசேகர், கோயம்பேடு வணிக வளாக காய்கறி மொத்த வியாபாரம் மீண்டும் துவங்குகிறது எனவும், பொதுமக்கள் தயவு கூர்ந்து மார்க்கெட்டிற்கு வரவேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார்.