Loading...
சபரி மலை கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இவர்களுள் 8 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்படுகின்றது.
சபரி மலை ஐயப்பனை தரிசிப்பதற்கான மண்டல கால பூஜைகள் கடந்த 15ஆம் திகதி ஆரம்பமானது. 41 நாள் நீடிக்கும் மண்டல பூஜைகள் நாளைய தினத்தோடு நிறைவடைகின்றது.
Loading...
இந்நிலையில் இன்றைய தினம் மலையடிவாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலையடுத்து 31 பேர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
காயமடைந்த அனைவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதேவேளை 8 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Loading...