விஜய் நடித்த தெறி படத்தில் மீனாவின் மகள் நைனிகா விஜய்யின் மகளாக நடித்திருப்பார். அப்படத்தில் அவர் விஜய்யை செல்லமாக பேபி பேபி என்று அழைத்தது அனைவரையும் கவர்ந்தது.
இந்த படத்தில் நைனிகா நடிக்கும்போது 5 வயது குழந்தையாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதை தொடர்ந்து பாஸ்கர் ஒரு ராஸ்கல் என்ற படத்தில் நடித்து அசத்தினார்.
இந்நிலையில் நடிகை மீனா நேற்று மகள்கள் தினத்தை முன்னிட்டு நைனிகாவுடன் எடுத்துக்கொண்ட கியூட்டான புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.
எப்போதும் குழந்தை நட்சத்திரமாக மனதை கவர்ந்த குழந்தைகளின் வளர்ச்சியை மட்டும் நம்மால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. அதே குழந்தையாகவே அவர்களை பார்த்து ரசிக்க ஆசைப்படுவோம்.
அந்த வகையில் நைனிகாவின் வளர்ச்சி ரசிகர்களை வியப்படைய வைத்துள்ளது. சீக்கிரத்தில் ஹீரோயின் சான்ஸ் வீடு தேடி வரும். மீனா ரஜினி அங்கிள்ற்கு ஜோடியாக நடித்தது போல் நைனிகாவும் ஒரு நாள் விஜய்க்கு ஜோடியாக நடித்தாலும் ஆச்சயப்படுவதற்கு இல்லை என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
A post shared by Meena Sagar (@meenasagar16) on Sep 27, 2020 at 3:57am PDT