சிறைச்சாலைகளில் இருந்தவாறு கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்தி போதைப் பொருள் வியாபாரம் மற்றும் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டனர் என அடையாளம் காணப்பட்டுள்ள திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுக்களை சேர்ந்த 33 கைதிகளை பூசா சிறைச்சாலைக்கு மாற்ற சிறைச்சாலை தலைமையகம் தயாராகி வருகிறது.
ஏற்கனவே பூசா சிறைச்சாலையில், திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்ட 46 பிரதான குற்றவாளிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் விசேட சிறைக் கூடங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் புதிதாக அந்த சிறைச்சாலைக்கு மாற்றப்படவுள்ள 33 கைதிகளுக்காக 100 விசேட சிறைக்கூடங்கள் நிர்மாணிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
வெலே சுதா, கஞ்சிபான இம்ரான் உட்பட முக்கிய குற்றவாளிகள் ஏற்கனவே பூசா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.