பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உயிரிழந்த நிலையில், அவர் தொடர்பான பல வதந்திகள் உலா வருவதால், அதற்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைத்தார் மகன் சரண்.
பிரபல பின்னணி பாடகரான எஸ்.பி.பாலசுப்ரமணியம் சில தினங்களுக்கு முன்பு, உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உலகின் பல்வேறு இடங்களில் எஸ்.பி.பிக்கு ரசிகர்கள் இருப்பதால், அவர் மரணம் குறித்து பல்வேறு கேள்விகள் எழ, அதற்கு ஏற்ற வகையில் வதந்திகளும் எஸ்.பி.பி மரணம் மற்றும் சிகிச்சைகள் குறித்து வலம் வந்தன.
இதனால் அதற்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், எஸ்.பி.சரண் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அப்பாவுக்கு சிகிச்சையளித்த மருத்துவர்களான சபாநாயகம், சுரேஷ் ராவ், தீபக் சுப்ரமணியம் மற்றும் கிஷோர். இவர்கள் நான்கு பேர் தான் அப்பாவிற்கு முழுக்க முழுக்க சிகிச்சையளித்தவர்கள், இவர்கள் நான்கு பேருக்குமே நான் மிகவும் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன், இவர்களுக்கு எங்கள் குடும்பத்தினர் அனைவருமே நன்றிக் கடன் பட்டிருக்கிறார்கள்.
இப்போது அப்பா குறித்து பல வதந்திகள் வருது, இது குறித்து பலரும் என்னை தொடர்பு கொண்டு, எது உண்மை? எது பொய்? ஒரு தெளிவான விளக்கம் கொடுங்க என்று கேட்குறாங்க, நான் இப்போ அதக்கு விளக்கம் கொடுக்கிறதா? என் அம்மாவ பார்த்துக் கொள்வதா? எங்களை நிம்மதியா இருக்கவிடுங்க, நாங்கள் எதையும் அப்பா விஷயத்தில் மறைக்கவில்லை என்று வேதனையுடன் கூறினார்.
மேலும், எஸ்.பி.பி அறிமுகப்படுத்திய அஜித், அவரின் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தவில்லை என்று கூறப்பட்டது. அதற்கு எஸ்.சரண் அஜித் வருகிறார், விசாரிக்கிறார், விசாரிக்கவில்லை, அது இப்போது முக்கியமா, அவர் வந்து அப்பாவை பார்த்தால் என்ன? பார்க்கவில்லை என்றால் என்ன? அவர் எனக்கு நல்ல நண்பர்.
இந்த மாதிரி சூழலில் அவர் வரவேண்டிய அவசியம் இல்லை, இப்போது அதைப் பற்றி பேச வேண்டியதும் இல்லை.
அதுமட்டுமின்றி சிகிச்சைக்கான பணம் அரசிடம், எஸ்.பி.பி குடும்பம் கோரியதாக கூறப்பட்டது. ஆனால் சரண் நாங்கள் வாரம், வாரம் அப்பாவின் சிகிச்சைக்கு தேவையான பணத்தை கட்டினோம்.
எங்களைப் பொறுத்தவரை அப்பா அப்போது ஐசியூவில் இருந்தார். இதனால் எங்களுக்கு பணம் முக்கியமாக தெரியவில்லை.
எவ்வளவு சிகிச்சைக்கு ஆனது என்று கேட்ட போது, அதை சரியாக கூற முடியாது. ஏனெனில் இது எங்களுக்கும், மருத்துவமனைக்கும் தெரியும். இது ஒரு பெரிய விளக்கம் வேண்டும். அதுமட்டுமின்றி இவ்வளவு தான் சிகிச்சைக்கு செலவு என்று இப்போதைக்கு சரியாக கூற முடியாது என்று பதில் அளித்தார்.