கொரோனாவால் ஏற்படும் மரணங்கள் உலக நாடுகளில் ஓரளவு குறைந்துள்ள போதிலும் பாதிப்பு தொடர்ந்த வண்ணம் இருக்கின்றது.
அத்துடன் முகக் கவசம் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் தற்போது குறைந்துள்ளது. எனினும் பொது இடங்களில் முகக்கவசங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
இப்படியிருக்கையில் KN95 முகக்கவசம் தொடர்பில் அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
இந்த முகக் கவசம் ஆனது சீனாவிலிருந்தே அனேகமான நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றது.
இவ்வாறு ஏற்றுமதி செய்யப்படும் KN95 முகக் கவசங்களில் 70 சதவீதமானவை பாதுகாப்பு அற்றவை என கண்டறியப்பட்டுள்ளது.
அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட முகக் கவசங்களை ஆய்வுக்குட்படுத்தியபோதே இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆய்வின்போது 15 வெவ்வேறு உற்பத்தியாளர்களின் 200 வகையான முகக் கவசங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.