புதிய அரசியல் அமைப்பில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்குவதனை எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
அமைச்சர் மஹிந்த அமரவீர இதனை தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
சிறந்த தமிழ் தலைவரான இரா.சம்பந்தன் மற்றும் தானும் கலந்துரையாடினோம். புதிய அரசியல் அமைப்பில் சமஷ்டி அப்படையிலான அரசியல் தீர்வுக்கு யோசனை எதனையும் முன்வைக்க போவதில்லை என இரா.சம்பந்தன் தன்னிடம் உறுதியளித்துள்ளார்.
மக்கள் இந்த கோரிக்கையினை முன்வைத்தாலும், தான் அதனை முன்வைக்க போவதில்லை என இர.சம்பந்தன் திட்டவட்டமாக பல முறை கூறியுள்ளார்.
அத்துடன், தனி நாடு என்ற கோரிக்கையினையும் முன்வைக்க போவதில்லை எனவும் கூறியுள்ளார். இவ்வாறான தமிழ் தலைவர் ஒருவர் எதிரக்கட்சி தலைவராக இருப்பதது நாட்டு மக்கள் செய்தி பெரும் பாக்கியம்.
அவர் போன்ற சிறந்த தலைவர் இருக்கும் போதே இனப்பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும். எவ்வாறாயினும், சம்பந்தன் தலைமை வகிக்கும் கூட்டமைப்பிற்குள்ளும் இனவாதிகள் பலர் இருக்கின்றனர்.
வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் போன்றவர்கள் தனி நாட்டு கோரிக்கையினை முன்வைக்கும் அதேவேளை, விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரை நினைவு கூறுகின்றனர்.
இதேவேளை, உண்மையான பௌத்தராக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஜனாதிபதி பதவியில் இருக்கும் நிலையில், அரசியல் யாப்பில் பௌத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமை ஒருபோதும் குறைக்க இடமளிக்கப்பட மாட்டாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.