வரும் 2017-ஆம் ஆண்டின் நாயகனாக சூரியன் இருப்பார் என ஜோதிட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
2017= 2+0+1+7=10=1.
இந்தப் புத்தாண்டின் எண் 1-ஆக வருகிறது. இந்த எண்ணின் நாயகன் சூரியன் ஆவார். கிரகங்களுக்குத் தலைமை தாங்கும் இவரது எண்ணில் இந்த ஆண்டு உதிக்கிறது.
சூரியன் ஆத்ம காரகன் ஆவார். இந்த ஆண்டில் பலருக்கு ஆத்ம ஞானம் கிடைக்கும். தன்னைத் தானே உணரும் நிலை உண்டாகும். சுய மரியாதை கூடும். உடல் சக்தி பெருகும். நோய்நொடிகள் குறையும். இதய சம்பந்தமான நோய்களுக்கு நல்ல மருந்து, மூலிகைகள் கண்டுபிடிக்கப்படும்.
அரசாள்வோருக்கு நற்பெயர் கிடைக்கும். அரசியலில் நல்லதொரு மாற்றமும் உண்டாகும். மருத்துவர்களுக்கு செழிப்புக் கூடும். மின் உற்பத்திப் பெருகும். காடு, மலை, வனாந்தரங்கள் செழிக்கும். குறிப்பிட்ட இடங்களில் பணிபுரிபவர்களுக்கும், நிர்வாகத்துறையினருக்கும், அனுகூலமான சூழ்நிலை உண்டாகும்.
தகுதி உள்ளவர்களுக்கு உயர் பதவி யோகம் கிடைக்கும். கீழ்த்திசைப் பயணத்தின்மூலமும், கீழ்த்திசை நாடுகள் மூலமும் பயன் கிடைக்கும். எரிபொருள், தோல், கம்பளி, ஆயுதங்கள், பட்டுத்துணி, கோதுமை, தானிய விதைகள், மரம் ஆகியவற்றின் மூலம் அதிக வருவாய் பெறலாம்.
1, 10, 19, 28 தேதிகளில் பிறந்தவர்களுக்கும் ஜனவரி, அக்டோபர் மாதங்களில் பிறந்தவர்களுக்கும், சிம்ம ராசி, லக்னக்காரர்களுக்கும், கிருத்திகை, உத்திரம், உத்திராட நட்சத்திரக்காரர்களுக்கும் ஜாதகத்தில் சூரிய பலம் உள்ளவர்களுக்கும் இந்த ஆண்டு மிகச் சிறப்பான ஆண்டாக அமையும்.
சூரியன் பிதுர்க்காரகன் ஆவார். உலகத்துக்கே (உலகத்தில் உள்ள அனைத்துயிர்களுக்கும்) தந்தை ஆவார். சூரியன் ருத்திரனைக் குறிப்பவர். ஐந்து முகம் கொண்ட சிவபெருமான். ருத்திரனை வழிபடுவோருக்கு அதிக நன்மைகள் நிச்சயம் கிடைக்கும். ருத்திர ஜபம் செய்வது சிறப்பாகும்.
பிரசித்தியும், பாடல் பெற்றதுமான சிவாலயங்களுக்குச் சென்று வருவதன் மூலமும் சிவார்ச்சனை செய்வதன் மூலமும் சுப பலன்கள் கூடப் பெறலாம். குறிப்பாக பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத் தலமான சிதம்பரம் சென்று அருள்மிகு ஸ்ரீ நடராஜப் பெருமானையும் சிவகாமி அன்னையையும் வழிபடுவது விசேடமாகும். சூரியனார் கோயிலுக்குச் செல்வதும் நல்லது. பிரதோஷ வேளை சிவ வழிபாடு பாபம் போக்கும். நன்மைகளைத் தரும். சிவனடியார்களுக்கு உதவுவதும் நல்லது.’
இனி பன்னிரண்டு ராசிக்காரர்களுக்கும் இந்த 2017 ஆங்கிலப் புத்தாண்டில் விளையக்கூடிய பொதுப்பலன்களைப் பார்ப்போம். ஜாதக பலம், மற்றும் நட்சத்திர, தசா, புக்தி அடிப்படையில் இப்பலன்கள் அதிகமாகவும் குறையவும் கூடும்.