பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது நடந்த தீ விபத்தில் வீடு ஒன்று முழுவதும் எரிந்து நாசமாகியுள்ளது.
இங்கிலாந்தின் Worthing நகரில் 80 வயதான ஜேர்மனியை சேர்ந்த தம்பதி வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் வீட்டில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதற்காக அவர்களது குழந்தைகள் மற்றும் பேரப்பிள்ளைகள் அங்கு கூடியிருந்தனர்.
அப்போது நள்ளிரவில் கிறிஸ்துமஸ் மரத்தை மின்னணு விளக்குகளுக்கு பதிலாக தீயினால் ஆன விளக்குகளை வைத்து அவர்கள் அலங்கரித்தனர்.
இந்நிலையில் எதிர்பாரத விதமாக கிறிஸ்துமஸ் மரம் தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. இந்த தீ வீட்டையும் சேர்த்து கொளுத்தியது.
பின்னர் தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அனைவரையும் பத்திரமாக மீட்டு தீயிணை அனைத்தனர்.
இந்த விபத்தில் அனைவரும் அதிர்ஷ்டவசமாக சிறிய காயங்களுடன் உயிர்த்தப்பினர்.