சசிகலாவை எதிர்த்து சமூக ஆர்வலரான டிராபிக் ராமசாமி சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி இருக்கிறார்.
சமூக ஆர்வலரான டிராபிக் ராமசாமி தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவை பல விஷயங்களில் எதிர்த்தவர்.
அவருக்கு எதிராகவே ஆர். கே. நகரில் போட்டியிட்டவர். அவருக்கு வைக்கப்பட்ட பேனர்களை கிழித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்.
மேலும், பல பொது நல வழக்குகளை போட்டு உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்து போராடி வருபவர்.
சமீபத்தில் அவர் உடல் நலமில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அந்த நிலையிலேயே அவர் சசிகலாவிற்கு எதிராக ஒரு வழக்கையும் நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்தார்.
இந்நிலையில் வீட்டிற்கு திரும்பிவிட்ட அவர், சசிகலாவிற்கு எதிராக சாகும் வரை உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், தமிழகத்தின் முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன் ராவ் வீட்டில் வருமானவரிச் சோதனை நடைபெற்றுள்ளது.
இதே போன்று ஜெயலலிதா வீட்டிலும் சோதனை நடத்தி சீல் வைத்து சசிகலாவை வெளியே துரத்த வேண்டும்.
இந்தக் கோரிக்கையை முன் வைத்துத்தான் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க தொடங்கி இருக்கிறேன் என்று தெரிவித்தார்.