பிரான்சில் பெண் ஒருவருடன் பாதுகாப்பற்ற உறவு வைத்துக் கொண்டதாக கூறி பிரெஞ்சு தூதர் ஒருவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டுக்கான வெளிநாட்டு தூதர் ஒருவருடன் 30 வயதான பெண்மணி ஒருவருக்கு இணையம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
44 வயதான அந்த தூதர் குறித்த பெண்ணுடன் பல முறை நேரில் சந்தித்து தமது நட்பை உறுதி செய்தும் வந்துள்ளார்.
இந்த நிலையில், இருவரும் ஒப்புதலுடன் முதன் முறையாக உறவு வைத்துக் கொண்டுள்ளனர்.
சம்பவம் நடந்த மூன்றாவது நாள் குறித்த பெண்மணி பொலிஸ் உதவியை நாடி, அந்த தூதுவர் மீது பாதுகாப்பற்ற முறையில் உறவு வைத்துக் கொண்டதாக கூறி புகார் அளித்துள்ளார்.
பாதுக்காப்பு முறையை பயன்படுத்தலாம் என அந்த தூதர் ஒப்புக்கொண்டதாகவும், பின்னர் திருட்டுத்தனத்தில் ஈடுபட்டதாகவும் அவர் அந்த புகாரில் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது அந்த தூதுவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. பெயர் உள்ளிட்ட எந்த தகவலும் அந்த தூதர் தொடர்பில் வெளியாகவில்லை என்றாலும், உள்ளூர் பத்திரிகை ஒன்று, அந்த தூதர் மத்திய கிழக்கு நாடுகளை சேர்ந்தவர் என குறிப்பிட்டுள்ளது.
பிரான்ஸ் சட்டத்தின் அடிப்படையில், கட்டாயப்படுத்துதல், மிரட்டி பணிய வைத்தல், எதிர்பாராத வகையில் உறவு வைத்தல் உள்ளிட்டவையை பலாத்காரம் என்றே பார்க்கப்படுகிறது.
ஆனால் உறவில் திருட்டுத்தனம் செய்வது தொடர்பில் தெளிவான எந்த சட்ட வரைமுறையும் இல்லை என்றே கூறப்படுகிறது.