சுவிட்சர்லாந்தின் டிசினோ மாகாணத்தில் சாலை விபத்தில் சிக்கி தந்தையும் ஒரு வயது குழந்தையும் பரிதாபமாக பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டிசினோ மாகாணத்தில் Gnosca பிரதான சாலையில் உள்ளூர் நேரப்படி மாலை 6 மணியளவில் இந்த கோர சம்பவம் நடந்துள்ளது.
கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று San Giuseppe தேவாலயத்தின் சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பயணம் செய்த 43 வயது நபர் சம்பவயிடத்திலேயே பலியான நிலையில், வாகனம் மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்ட 1 வயது குழந்தை குற்றுயிராக மீட்கப்பட்டது.
தகவல் அறிந்து விரைந்து வந்த பொலிசார் மற்றும் மருத்துவ உதவிக்குழுவினர், குழந்தையை உடனடியாக ஹெலிகொப்டர் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
ஆனால் சிறிது நேரத்திலேயே குழந்தையும் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இதனிடையே, டிசினோ மண்டல பொலிஸைச் சேர்ந்த தடயவியல் குழு விபத்தின் சரியான போக்கை விசாரித்து வருகிறது.
இரவு 11 மணி வரை விபத்து நடந்த சாலையானது மூடப்பட்டது. மேலும், உறவினர்களுக்கு உளவியல் உதவியை வழங்க ஒரு குழு பணியமர்த்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.