இந்திய டெஸ்ட் அணித்தலைவர் விராட் கோஹ்லி உட்பட இந்திய வீரர்கள் அனைவரும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
கோஹ்லி தலைமையிலான இந்திய டெஸ்ட் அணிக்கு இது சிறந்த ஒரு ஆண்டாக அமைந்துள்ளது.
தொடர் வெற்றிகளை பெற்று வந்த இந்தியா சமீபத்தில் நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரை 4-0 என கைப்பற்றி ஆண்டை வெற்றியுடனே நிறைவு செய்கிறது.
இந்நிலையில் கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி இந்திய வீரர்கள் ஒரு போட்டியில் ஈடுபட்டனர்.
அதாவது, ஒரு வேலையை செய்து கொண்டிருக்கும் போது அப்படியே சிலையாக மாற வேண்டும்.
இதைத் தொடர்ந்து இந்திய வீரர்கள் பலரும் வித்தியாசமான செய்கையால் சிலையாக மாறினர்.
இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி வெற்றி பெற்ற கிண்ணத்தை முத்தமிடுவது போன்று போஸ் கொடுத்தார்.
இந்த ஜாலி வீடியோவை பிசிசிஐ தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.