லண்டன் குரைடனில் உள்ள பொலிஸ் நிலையத்தில் வைத்து, அதிகாரியை சுட்ட சிங்கள இளைஞரான லூயிஸ் என்பவரை அவரது நண்பர்கள் ஹிட்லர் என்று தான் அழைப்பார்களாம். சிறு வயதில் இருந்தே Croydon -கன்டபெரி வீதியில் உள்ள ஒரு வீட்டில் கூடும் இந்த சிங்கள இளைஞர்கள், பல திருகு தாளங்களை செய்துள்ளதாக தற்போது பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் லூயிசுடன் பழகிய 5 சிங்கள இளைஞர்களை பொலிசார் அணுகி அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள் என அதிர்வு இணையம் மேலும் அறிகிறது.
லண்டனில் உள்ள சுமார் 5க்கும் மேற்பட்ட சிங்கள வீடுகளுக்கு பொலிசார் சென்று, அங்குள்ள லூயிசின் நண்பர்களை அவர்கள் தொடர்ந்தும் விசாரணை செய்து வருகிறார்கள். எந்த ஒரு ஆயுதம் தொடர்பான குற்றச் செயல்களையும் இதுவரை தமிழர்கள் லண்டனில் செய்யவில்லை. ஆனால் விடுதலைப் புலிகளை தடைப் பட்டியலில் போட்டு தமிழர்களுக்கு தொடர்ந்தும் அச்சுறுத்தல் விடுத்து வருகிறது பிரித்தானிய அரசு.
ஆனால் சிங்கள இளைஞர்கள் ஆயுத உபயோகத்திலும், விற்பனையிலும் உள்ளார்கள். இருப்பினும் சிங்கள அரசுக்கே பிரித்தானியா ஆதாரவாக இருக்கிறது. இது எந்த வகையில் நியாயம் என்று தமிழர்கள் தரப்பால் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.