2017ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு சிறப்பான ஆண்டாக அமையாது என அவரது வைத்தியர், சோதிடர் மற்றும் அரசியல் ஆலோசகரின் கருத்தாகும் என சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
நேற்று இரவு அவரது வீட்டில் இடம்பெற்ற கூட்டத்தில் இது தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டுள்ளது.
நீண்ட காலமாக அவரது மன ரீதியான பாதிப்பு நிலைமைக்கு சிகிச்சை பெற்றுக் கொள்கின்ற நிலையில், அரசியல் அழுத்தங்களில் இருந்து விலகியிருக்குமாறு வைத்திய ஆலோசனை கிடைத்துள்ளது.
இது தொடர்பில் கருத்திற் கொள்ளாமையினால் இந்த மனரீதியான பாதிப்பு அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜோதிட கணிப்புக்கு அமைய 2017ஆம் ஆண்டு மஹிந்தவுக்கு பாரிய அளவு மன ரீதியான மற்றும் சுகாதார நிலைமைக்கு சிறப்பான வருடமாக அமையாதென ஜோதிடர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அரசியல் ரீதியாகவும் மஹிந்தவுக்கு பாதிப்பே ஏற்படும். ஒரு போதும் நன்மையானதாக அமையாது எனவும் அவரது அதிகாரத்திற்காக தனது குடும்பத்தினுள் சில எதிர்ப்புகள் ஏற்படும் என்பது அரசியல் ஆலோசகர்களின் கருத்தாகும்.
அரசியல் விடயத்தில் எப்படியிருந்தாலும், சுகாதார நிலைமை தொடர்பில் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் என நாமல் ராஜபக்ச தனது குடும்ப உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளார்.