பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடந்த தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதி சிறையில் அடைக்கப்பட்டான்.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இருக்கும் சார்லி எப்தோ பத்திரிகையின் முன்னாள் அலுவலகம் அமைந்துள்ள வீதியில் கடந்த செவ்வாய் கிழமை பயங்கரவாத தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
இந்த தாக்குதலின் முக்கிய குற்றவாளியான Zaheer Hassan Mahmoud எனும் 25 வயதுடைய தாக்குதல்தாரி பொலிசாரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டான்.
நீதிபதி மேற்கொண்ட விசாரணைகள் மற்றும் ஆதாரங்களை ஆராய்ந்து, குற்றவாளிக்கு படுகொலை முயற்சிகள் பிரிவில் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தனர்.
தாக்குதல் நடத்திய Zaheer Hassan Mahmoud பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் என்று ஆரம்பத்தில் கூறப்பட்டாலும், ஆனால் அது குறித்து இன்னும் குழப்பம் நீடித்து வருவதால், இது தொடர்பான முழு விசாரணைக்கு பின்னரே அந்த நபர் எந்த நாட்டைச் சேர்ந்தவன் என்பது தெரியவரும் என்று அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
மேலும்,அது தொடர்பான விசாரணைகளை பரிஸ் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் மேற்கொள்ள வேண்டும் எனவும் நீதிமன்றத்தினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.