ஆசியாவில் இரண்டாவது அதிக வயதுடைய பெண் இலங்கையில் வாழ்ந்து வருவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
களுத்துறை மாவட்டத்தின் நேபட க்லோடன் தோட்ட பகுதியில் வாழும் வேலு பாப்பானி என்ற பெண்மனியே ஆசியாவில் இரண்டாவது அதிக வயதுடைய பெண்ணாகும்.
1903ஆம் ஆண்டு மே மாதம் 3ஆம் திகதி பிறந்த வேலு பாப்பானிக்கு தற்போது வயது 117ஆகும்.9×9 அடியிலான சிறிய அறையில் வாழும் குறித்த பெண் மிகவும் ஆரோக்கியமாக வாழ்ந்து வருகிறார். சிறந்த முறையில் கண் தெரிவதோடு, நன்றாக காது கேட்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தமிழ் தந்தைக்கும் சிங்கள தாய்க்கும் பாப்பானி மகளாக பிறந்துள்ளார். பாப்பானிக்கு மகன் மற்றும் மகள் உள்ளதாகவும், அவர்கள் தற்போது எங்கு எனத் தெரியவில்லை எனக் குறிப்பிடப்படுகின்றது.
தமிழ் மற்றும் சிங்கள மொழி பேசக்கூடிய பாப்பானி இன்னமும் தனியாக நடந்து செல்ல கூடிய அளவில் ஆரோக்கியமாக உள்ளார். தம்பதி ஒன்றே குறித்த பெண்ணுக்கு இருப்பிடம் வழங்கியுள்ளனர். எனினும், குறித்த பெண்ணுக்கு போதுமான வசதிகள் இன்றி வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை அரசாங்கத்தினால் அவருக்கு மாதம் 5000 ரூபாய் கிடைப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 117 வயதில் மிகவும் ஆரோக்கியமான பெண்மணியாக இன்னும் வாழ்ந்துவரும் பாப்பானி அம்மையார் ஆச்சரியமானவர் என பலரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.
தெற்காசியாவில் அதிக வயதுடைய பெண்மணி, கடந்த ஜனவரி மாதம் ஜப்பானில் அடையாளம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.