த்ரிஷா…என்னவொரு அழகு….எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் நச்சென்று பொருந்திவிடுவார், அழகான நடிப்பால் அனைவரையும் கட்டிப்போட்டு விடுவார்.
17 வருடங்களாக சினிமாவில் அது முன்னணி நாயகியாக இருக்கிறார் என்றால் சும்மாவா? 8 முறை பிலிம்பேர் விருதுகள் வாங்கி இருக்கிறார்.
எப்போதும் ஒரே மாதிரி இருக்கிறாரே? எப்படி இப்படியெல்லாம் என நாம் யோசித்திருப்போம். அந்த ரகசியத்தை அவரே சொல்கிறார்.
தன்னுடைய அழகுக்கு மிக முக்கியமான காரணம் என அவர் குறிப்பிடுவது தண்ணீர். ஷுட்டிங் எங்கு சென்றாலும் கையுடன் தண்ணீர் பாட்டிலை கொண்டு சென்று விடுவாராம்.
காலையில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான சுடுநீரில், அரை மூடி எலுமிச்ச பழத்தைப் பிழிந்து, லேசாக உப்பு போட்டுக் கொண்டு, வெறும் வயிறாக இருக்கும் போது குடிச்சிடுவேன்.
காய்கறி அதிகம் சாப்பிடும் த்ரிஷா, தினமும் நிச்சயம் ஒரு ஜூஸை அருந்தி விடுவாராம்.
குறிப்பாக மதிய உணவு இடைவேளையின் போது அமைதியான இடத்தில் அமர்ந்து கொண்டு யோகா செய்வாராம்.
சுத்தமான உடை, சுகாதாரமான இடம், எப்பவும் மகிழ்ச்சி இதுதான் ஸ்லிம் ப்யூட்டியின் ரகசியமாம்.