Loading...
பற்களை ஒருநாளைக்கு இரண்டு முறை துலக்கி, தூய்மை செய்ய வேண்டும். இதனால் பற்களின் ஈறுகள் பாதிப்படையாமல், சொத்தைப் பற்கள் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.
மேலும் நாம் பற்களை பாதுகாப்பதற்கு, கடைகளில் விற்கப்படும் பேஸ்டுகளை பயன்படுத்துகின்றோம்.
Loading...
இதற்கு பதிலாக இயற்கையான மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு சில பொருட்கள பயன்படுத்தினால், பற்களை பளிச்சிட செய்வதுடன், பற்களின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம்.
பற்கள் வெள்ளையாக பளிச்சிட என்ன செய்ய வேண்டும்?
- நம் முன்னோர்கள் காலங்காலமாக பின்பற்றி வந்த வேப்பங்குச்சியைக் கொண்டு நாம் தினமும் பற்களைத் துலக்கினால், பற்கள் வெண்மையாகுவதோடு, ஆரோக்கியமாகவும் இருக்கும்.
- பேக்கிங் சோடாவில் புதினா எண்ணெய் சேர்த்து கலந்து, மாதத்திற்கு 2 முறை பற்களைத் துலக்கி வர வேண்டும். இதனால் விரைவில் பற்களில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.
- வாய் பிரச்சனைகளை கல் உப்பு சரிசெய்வதால், கல் உப்பை தேனுடன் கலந்து பேஸ்ட் செய்து, பற்கள் மீது தடவி பிரஷ் செய்து வந்தால், பற்கள் வெண்மையாக இருக்கும்.
- புதினாவை பேஸ்ட் போல செய்து, பற்களில் தடவி 2 நிமிடம் பிரஷ் செய்து, பின் நீரால் வாயைக் கொப்பளிக்கவும், இதே போல் தினமும் செய்து வந்தால், வாய் துர்நாற்றம் நீங்குவதோடு, ஈறுகளில் ரத்த கசிவு ஏற்படுவதும் தடுக்கப்படுகிறது.
- சுத்தமான மற்றும் கெட்டியான தேங்காய் எண்ணெயை பற்களில் தடவி பிரஷ் செய்து, 2 நிமிடம் கழித்து, உப்பு கலந்த நீரில் வாயைக் கொப்பளிக்க வேண்டும். இதே போல் தினமும் செய்து வந்தால், பற்களில் இருக்கும் கறைகள் நீங்கி, சொத்தை பற்கள் வருவதை தடுக்கிறது.
- 1 டேபிள் ஸ்பூன் வேப்பிலை பொடியில், சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்து, பின் அதை பற்களில் தடவி பிரஷ் செய்து வர வேண்டும். இதனால் வாய் துர்நாற்றம், பல்வலி போன்ற பிரச்சனைகள் வராது.
Loading...