நமது மூளையின் செயல்பாடுகள் சிறப்பாக இருக்க, தினமும் நாம் சாப்பிடும் உணவில்கனிமச்சத்துக்கள் மற்றும் விட்டமின்கள் போதுமான அளவில் இருக்க வேண்டும்.
தினமும் ஆரோக்கியமான உணவை சாப்பிட்டு வந்தாலே, அனைத்து உறுப்புகளும் புத்துணர்ச்சியுடன், சுறுசுறுப்பாக செயல்படும்.
வாழைப்பழம் ஜூஸ்
1 கப் பால், 3 வாழைப்பழம், 1 ஸ்பூன் புரோட்டீன் பவுடர் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் துருவிய தேங்காய் ஆகிய அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து நன்கு அரைத்து ஜூஸ் செய்து, தினமும் குடித்து வந்தால், ஞாபக மறதி தடுக்கப்பட்டு, நினைவாற்றலை அதிகரிக்கச் செய்கிறது.
பெர்ரி ஜூஸ்
ஒரு கப் பெர்ரி பழங்கள், 4 துண்டுகள் அன்னாசிப் பழம், 2 டேபிள் ஸ்பூன் சியா விதைகள் மற்றும் 1 ஸ்பூன் புரோட்டீன் பவுடர் ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்து, ஜூஸ் செய்து குடிக்க வேண்டும். இதனால் மூளையினுள் உட்காயங்கள் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.
மாதுளம் பழம் ஜூஸ்
1 கப் மாதுளை ஜூஸ், 1/2 கப் ஸ்ட்ராபெர்ரி, 2 டீஸ்பூன் தேன் மற்றும் 1 கப் தயிர் ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்து, அந்த ஜூஸை தினமும் குடித்து வர வேண்டும்.. இந்த ஜூஸில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நமது மூளையின் சக்தியை மேம்படுத்தி, நினைவு திறனை அதிகரிக்கச் செய்கிறது.
பசலைக் கீரை ஜூஸ்
1 கப் பசலைக் கீரை, 1 கப் மாம்பழம், 1 அவகேடோ பழம் மற்றும் 2 டீஸ்பூன் தேன் ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்து, அதைக் குடித்து வந்தால், அல்சைமர் என்னும் ஞாபக மறதி நோயைத் தடுக்கப்படுகிறது.