13வது ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தின் அபு தாபி, துபாய், ஷார்ஜா ஆகிய மூன்று நகரங்களில் போட்டி நடைபெற்று வருகின்றது.
போட்டிகளில் கலந்து கொள்ளும் வீரர்களுக்கு நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
முக்கியமாக பயோ-பபுள் வீரர்கள் எக்காரணத்தைக் கொண்டும் வெளியே வர கூடாது என்றும்,விதிமுறையை மீறினால் ஆறுநாள் தனிமையும் அதையும் மீறி மூன்றாவது முறையாக மீறினால் தொடரில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்படுவார்கள் என்றும் பிசிசிஐ தெரிவித்திருந்தது.
இந்நிலையில் வீரர்களை விதிமுறையை மிறீ வெளியே அனுமதித்தால் அந்த அணிக்கு ஒரு கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று பிசிசிஐ எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் இந்த விதியை இரண்டாவது முறையாக அனுமதித்தால் ஒரு புள்ளி திரும்பப் பெறப்படும் என்றும், மூன்றாவது முறையாக அனுமதித்தால் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் அதில் கிடைக்கும் புள்ளிகள் கழிக்கப்படும் எனவும் பிசிசிஐ எச்சரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.