அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா 5 மில்லியன் டொலர்கள் பெறுமதியான பரிசுப்பொதி ஒன்றினை அறிவித்துள்ளது.
நிலவினை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்படவுள்ள ஆய்வு ஒன்றிற்காகவே இந்தப் பரிசுப்பொதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது நிலவின் மீதான எதிர்கால ஆராய்ச்சிகளின்போது சக்தி வழங்குதல், முகாமைத்துவம் செய்தல் மற்றும் சேமிப்பகங்களுக்கான சரியான தீர்வினை வழங்குபவர்களுக்கு இப் பரிசுப்பொதி வழங்கப்படவுள்ளது.
தற்போது நிலவின் மீதான ஆய்வின்போது சூரிய சக்தி பயன்படுத்தப்பட்டுவருகின்றது.
எனினும் இரவு நேரங்களில் சூரிய சக்தியைப் பெறுவதில் சிரமம் காணப்படுகின்றது.
எனவே இதற்கான மாற்று தீர்வு எதிர்பார்க்கப்படுகின்றது.
இதன் முதலாம் கட்டத்திற்கான பதிவுகள் செப்டெம்பர் 25 ஆம் திகதி முதல் ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகின்றன.
அடுத்த வருடம் மார்ச் 21 ஆம் திகதி இந்த முதற்கட்டத்தில் வெற்றிபெறுபவர்களின் விபரங்கள் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.