வடகொரிய அதிபர் கிம்க் ஜாங்கின் இளைய சகோதரி கிம் யோ ஜோங் ஜூலை மாதத்துக்கு பின்னர் தற்போது பொதுவெளியில் தோன்றியுள்ளார்.
அமெரிக்கா மற்றும் தென் கொரியாவுக்கு எதிரான கொள்கைகளை வடிவமைப்பதில் முக்கிய பங்காற்றி, அதிபர் கிங் ஜாங்குக்கு அடுத்தபடி அதிகாரம் கொண்டவராக கிம் யோ ஜோங்கின் கருதப்பட்டு வந்தார்.
இதனிடையே ஜூனில் தென்கொரியாவுடன் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியால் ஜோங்கின் பதவி பறிக்கப்பட்டதாக கூறப்பட்டு வந்தது.
இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில், காங்வோன் மாகாணத்தின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வயல் வெளிகளை ஆய்வு செய்யும் பணியில் அதிபருடன் ஜோங்கின் பங்கேற்றதாக அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
அதாவது ஜூலை மாதத்தில் இருந்து பொதுவெளி மற்றும் அரசியல் நிகழ்வுகள் எதிலும் பங்கேற்காமல் இருந்த அவர் தற்போது வெளியில் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.