ஸ்ரீலங்காவிலுள்ள கொரோனா பரவல் தடுப்பு தேசிய மையம் அல்லது சுகாதாரத் துறை பரிந்துரைத்தால் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை மீண்டும் திறக்க முடியும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச ரீதியில் கொரோனா வைரஸ் பரவல் நிலைமையை கருத்திற்கொள்ளும் போது 2021ஆம் ஆண்டளவிலேயே இந்த விமான நிலையத்தை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், வெளிநாடுகளில் உள்ள ஸ்ரீலங்காவினரை நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.
கொரோனா வைரஸ் பரவலானது குளிர்காலத்தில் அதிகரிக்கும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ள நிலையில், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் திறக்கப்படும் நடவடிக்கையானது மேலும் காலதாமதமாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.