முன்னணி ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பு நிறுவனங்களுள் ஒன்றான Oppo நிறுவனம் A93 எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்துள்ளது.
இக் கைப்பேசியானது 6.43 அங்குல அளவு, 2400 x 1080 Pixel Resolution உடைய AMOLED தொடுதிரையினைக் கொண்டுள்ளது.
அத்துடன் Mediatek Helio P95 processor, பிரதான நினைவகமாக 8GB RAM மற்றும் 128GB சேமிப்பு நினைவகம் என்பனவும் தரப்பட்டுள்ளன.
மேலும் 16 மெகாபிக்சல்கள் மற்றும் 2 மெகாபிக்சல்களை உடைய டுவல் செல்ஃபி கமெரா, 48 மெகாபிக்சல்கள், 8 மெகாபிக்சல்கள், 2 மெகாபிக்சல்களை உடைய இரு கமெராக்கள் என மொத்தமாக 4 பிரதான கமெராக்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
Android 10 மற்றும் ColorOS 7.2 இயங்குதளங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இக் கைப்பேசியில் 18W அதிவேக சார்ஜ் தொழில்நுட்பம் மற்றும் 4000 mAh மின்கலமும் தரப்பட்டுள்ளது.
இதன் விலையானது 324 டொலர்கள் ஆகும்.