கயனாவில் 50 வயது மதிக்கத்தக்க நபர் சவக்கிடங்கை உடைத்து நுழைந்து, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பெண்ணிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென் அமெரிக்காவின் கயனாவில் இருக்கும் Port Kaituma மருத்துவனை சவக்கிடங்கின் உள்ளே கடந்த செப்டம்பர் மாதம் 26-ஆம் திகதி நுழைந்த, சுமார் 50 வயது மதிக்கத்தக்க Leroy Chacon என்ற நபர், அங்கு கொரோனாவால் இறந்து கிடந்து வைக்கப்பட்டிருந்த பெண்ணிடம் அநாகரீகமான செயலில் ஈடுபட்டுள்ளார்.
இது குறித்த தகவல் பொலிசாருக்கு தெரியவர, உடனடியாக அவரை பாதுகாப்புடன் கைது செய்துள்ளனர். இதையடுத்து கடந்த புதன் கிழமை இந்த சம்பவம் தொடர்பாக அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது அந்த நபர் குற்றத்தை ஒப்புக் கொண்டதால், அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அதற்கு முன் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படும் படி உத்தரவிடப்பட்டுள்ளது.