அயர்லாந்து கடலில் அமைந்துள்ள Isle of Man தீவில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படாத பிரித்தானியர்கள் ஐவர் கைது செய்யப்பட்டு சிறை தண்டனைக்கு விதிக்கப்பட்டுள்ளனர்.
தொழில் நிமித்தம் Isle of Man மாநிலத்திற்கு சென்ற 5 பிரித்தானிய வெல்டர்களே தற்போது சிறைத்தணடையை அனுபவித்து வருகின்றனர்.
சம்பவத்தன்று இந்த ஐவரும் மாஸ்க் அணிந்து சூப்பர் மாக்கெட் ஒன்றில் மதிய உணவு வாங்க சென்றுள்ளனர்.
Isle of Man மாநிலமானது பிரித்தானிய சட்ட திட்டங்களுக்கு உட்படாதது என்பதும், இங்கு வேறு சட்டங்கள் அமுலில் இருப்பதும் இவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை என கூறப்படுகிறது.
மேலும், வெளியில் இருந்து எவர் மாநிலத்திற்குள் வந்தாலும், 14 நாட்கள் கட்டாய சுய தனிமைப்படுத்தலுக்கு உட்பட வேண்டும் என்ற சட்டம் இங்கு அமுலில் உள்ளது.
ஆனால் கைதான பிரித்தானியர்கள் ஐவரும் வெறும் இரண்டு நாட்கள் வேலை நிமித்தமே Isle of Man மாநிலத்திற்கு சென்றுள்ளனர்.
இந்த நிலையில் மாஸ்க் அணிந்து டெஸ்கோவில் உணவு வாங்குவதைக் கண்ட ஒரு குடியிருப்பாளர் பொலிசாருக்கு தகவல் அளிக்கவும், பின்னர் அவர்கள் தங்கள் ஹொட்டலில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
தற்போதைய சூழலில் அங்காடிகளுக்கு உள்ளே மாஸ்க் அணிவது கட்டாயமல்ல என்பது Isle of Man மாநிலத்தில் அமுலில் உள்ளது.
இதனால் மாஸ்க் அணிந்து அங்காடிக்குள் ஐவரை காண நேர்ந்த குடியிருப்பாளர் ஒருவர், இவர்கள் உள்ளூர் மக்கள் அல்ல என்பதை உறுதி செய்து பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.
பிரித்தானியர்கள் ஐவரையும் பொலிசார் கை விலங்கிட்டு, ஹொட்டலில் இருந்து அழைத்துச் சென்றுள்ளனர். ஒரு கொடும் குற்றவாளியை நடத்துவது போன்றே அவர்களை நடத்தியதாக உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதனிடையே, வியாழக்கிழமை அவர்கள் நீதிமன்றத்தின் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, மாநிலத்தில் அமுலில் இருக்கும் கொரோனா சட்ட விதிகளை மீறியதாக அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
அவர்களுக்கு 14 நாட்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது, ஆனால் ஏழு நாட்களுக்குப் பிறகு நாளை விடுவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.